தேடி வந்த வசந்தமே By Sathya Rajkumar
உங்களத் தெரியாம இருந்தாத்தான் ஆச்சர்யம் , இந்த பெங்களூர் சிட்டில விரல் விட்டு எண்ணக்கூடிய தொழி லதிபர்கள்ள நீங்களும் ஒருத்தர்ங்கறது எல்லாருக்குமே தெரியுமே " என்றார் வாசுதேவன் . அப்பொழுது ஹாலுக்கு வந்த அவரது மனைவி சுமதி யும் , வீட்டுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றார் . “ நாங்க வந்த காரணம் ” என்று வந்தவர்கள் ஆரம்பிக்க " சொல்லுங்க " என்றார் வாசுதேவன் . " எங்களுக்கு ரெண்டு பசங்க ஸார் , பெரியவன் சரவணன் , சின்னவன் ஹரிஹரன் . அப்படியா . 'வாசுதேவனின் மனைவி சுமதி ஸ்வீட் , காரம் கொண்டு வந்து வைத்து உபசரிக்க , " சரி நல்ல விஷயத்த ஸ்வீட் டோடயே ஆரம்பிக்கலாமே " என்று வந்தவர்களும் எடுத்துக் கொண்டனர் ' ' உங்க பெரிய பொண்ணு நர்மதாவ எங்க பையன் சரவணனுக்குப் பிடிச்சிருக்காம் . உங்க பொண்ணு கூடப் பேசினதெல்லாம் கிடையாது , அப்பார்ட்மெண்ட் ஃபங் ஷன் அன்னைக்கு நர்மதாவோட டேன்ஸ் பாத்திருக்கான் . ' ' " அதுக்கப்புறமும் ரெண்டு , மூணு முறை போக வர யதேச்சையாப் பாத்திருக்கான் . நேத்து தான் எங்ககிட்ட சொன்னான் . சரி நல்ல விஷயத்துக்கு எதுக்கு யோசிக்க ணும்னு , உங்க மகள எ