பிளே ஸ்டோரில் இருந்து 28 போலி செயலிகளை நீக்கிய கூகுள் !

பிளே ஸ்டோரில் இருந்து 28 போலி செயலிகளை நீக்கிய கூகுள் !

கூகிள் பிளே ஸ்டோரில் குறைந்தபட்சம் சுமார் 48,000 பேர் வரை இன்ஸ்டால் செய்த 28 செயலிகளை கூகுள் நீக்கிவிட்டது. இந்த செயலியன்கள் போலியாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் இவை, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.


பிளேக் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகள் அவற்றின் டிக்ரிபஷனில் குறிப்பிடப்பட்ட படி இயங்கவில்லை, அவை வழங்கிய பெயருக்கு ஏற்றவாறு செயல்படவில்லை என கூகுள் அறிவித்திருக்கிறது. நீக்கப்பட்டிருக்கும் 28 செயலிகளையும் சர்வேஷ் டெவலப்பர் என்ற ஒரே டெவலப்பர் உருவாக்கியுள்ளது.

நீக்கப்பட்ட போலி செயலி பெரும்பாலும் நிதி சார்ந்த சேவைகள், ஸ்டிக்கர், டிப்ஸ் மற்றும் வெப் ஹோஸ்டிங், டி.என்.எஸ். உள்ளிட்டவை உள்ளது. போலி செய்திகளை பற்றி ஆய்வு மேற்கொண்ட அறிக்கை வெளியிட்ட க்விக் ஹீல் பிளே ஸ்டோரில் இருந்த போலி செயலிகளை கண்டறிந்தார்.

பின் போலி செயலிகளை பற்றிய விவரங்கள் க்விக் ஹீல் கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பியது. நீக்கப்பட்ட 28 செயலிகள் முழுக்க அதிகப்படியான விளம்பரங்கள் இடம்பெற்றிருந்தன, பயனர்களின் திரை முழுமையான விளம்பரங்களை காட்சிப்படுத்தி வந்தன. அனைத்து செயலிகளும் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டது என்று க்விக் ஹீல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கூகிள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்ட ஸ்கிரீன் ஷாட்ஸ் மூலம் காட்சிப்படுத்தப்பட்ட அம்சங்களை சில செயலிகளை வழங்கவில்லை என்று க்விக் ஹீல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலிகள் பயனர்களுக்கு ஏதேனும் பணியை கொடுத்து அவர்களுக்கு வருவாய் ஈட்டச்செய்ததாக கூறப்படுகிறது.


இதனால் பயனர்கள் இந்த செயலிகளில் தோன்றும் விளம்பரங்களை பார்க்கவும், சில செயல்களை கூடுதலாக இன்ஸ்டால் செய்து அவற்றில் சில விளம்பரங்களை க்ளிக் செய்ய வேண்டும். சில செயலிகள் பயனர்கள் பத்து புள்ளிகள் பெற்றால் பேடிஎம் மூலம் பணம் பெறலாம் என்று வாக்கில் விளம்பரம் செய்திருக்க.

எனினும், அவ்வாறு செய்த பின் பயனர்களுக்கு பேடிஎம் மூலம் பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. பயனர்கள் முழு புள்ளிகளை பெற்றாலும், மீண்டும் பழைய வலைப்பக்கம் திறக்கும் என்று பயனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Popular posts from this blog

How To All Indian Movie download App

தேடி வந்த வசந்தமே By Sathya Rajkumar

குஜராத் 2002 கலவரம் Gujarat 2002 Kalavaram